NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி..!

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு வீதியால் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை வீதியை வழிமறித்து ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை தூக்கி எறிந்ததோடு குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு சென்றுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் காயங்களோடு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles