NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மூதூர் – ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் இன்று பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே யானை தாக்குதலுக்கு இலக்காகி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles