NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் இன்று பூரண கதவடைப்பு!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய வியாபார, நகை கடைத்தொகுதிகள் இவ்வாறு காட்சியளித்தன.

வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

அரச நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் கருதி திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles