NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் இன்று மனிதச்சங்கிலி போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தப்பட்ட விவகாரத்தில் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (4)காலை 9 மணிக்கு போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டம் ஆரம்பமானது.

மருதனார்மடம் தொடக்கம் யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக கட்சி ஆகியன இணைந்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

எனினும், இன்றைய போராட்டத்தில் எதிர்பார்த்தளவு மக்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. மருதனார்மடம், கொக்குவில், யாழ் நகரம் ஆகிய இடங்களில் மட்டும் சிறிது தூரத்துக்கு மக்கள் வீதியோரமாக வரிசையில் நின்றிருந்தனர்.

 மருதனார்மடத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் மிக பெருமளவு பிரதேசத்தில் போராட்டம் நடக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles