NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தக நிலையத்துக்கு எதிராக நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  

 சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன.  

 இதன்போது காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

 குறித்த வழக்கு நேற்று (05) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து இருவரையும் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் ஒருவருக்கு 20,000 ரூபாய் தண்ட பணமும் மற்றைய நபருக்கு 8,000 ரூபாய் தண்ட பணமும் விதித்தது.

Share:

Related Articles