NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கூரிய ஆயுதங்கள் மீட்பு..!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தஇனம் வியாழக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக 

விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Articles