NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது…!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (30) வியாழக்கிழமை கைதாகியுள்ளார். 

கிளிநொச்சி – கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேகநபரும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles