யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 126 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, மீட்கப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் 44 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது