NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது..!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை பொலிஸாராலும், நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles