NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…!

யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் 25ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (26) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:

Related Articles