யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது A+ (A Positive), A- (A Negative), O- (O Negative) ஆகிய இரத்த வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக் கொடையாளர்கள் பருத்தித்துறை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்கி உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த அவசர இரத்ததானம் வழங்குவதன் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சையை சீராக வழங்க முடியும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.