யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்சல் காரணமாக இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவர்கள் அனைவரும் கரவெட்டி,சாவகச்சேரி,பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.