NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று 750 சந்தேக நபர்கள் கைது!

யுக்திய நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனைகள் குறித்து பொலிஸ் அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் நேற்று (06) நடத்தப்பட்ட 780 சுற்றிவளைப்புகளில் 750 ஆண் சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும் 3 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் மூவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மேல் மாகாணத்தில் 503 சுற்றிவளைப்புகளும் தென் மாகாணத்தில் 62 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles