NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரெய்ன் – ரஷ்ய போரில் ஈடுபட்ட இலங்கையர்கள்!

யுக்ரெய்ன் – ரஷ்ய போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் தொடர்பில் 464 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும், ரஷ்யாவுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது என்று அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய யுக்ரெய்ன் போரில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ

‘பலர் இந்தியாவிற்கோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கோ சென்றுவிட்டு அங்கிருந்து ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் எத்தனை பேர் சென்றுள்ளனர் என்ற தகவல் இல்லை.

இந்நிலையில், 464 இலங்கையர்கள் தொடர்பில் 464 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

‘இவர்கள் ரஷ்யாவுக்குச் சென்ற பின்னர், ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்து சண்டையிட பாதுகாப்புப் படையினருடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அந்த உடன்படிக்கைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என அவர் எமக்கு அறிவித்திருந்தார்.

ஆனால் இது சட்டப்படி செல்லுபடியாகும் ஒப்பந்தம். தற்போது, ​​126 பேரை தொடர்புகொள்வது கடினம் என குடும்பத்தினரால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.’ என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles