NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார்.

யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் யுக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை யுக்ரைன் ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles