NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளிடையே பயங்கர மோதல் – 450 யுக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

யுக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளிடையே மீண்டும் பயங்கர மோதல் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுக்ரைன் படைகள் நடாத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 யுக்ரைன் இராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, யுக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles