NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் இந்த யுவதியின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்டை கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles