ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான யூரோ 2024 கிண்ண இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக சோமாலிய தலைநகரமான மொகடிஷுவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரசிகர்கள் கூடியிருந்தனர்.
அவ்வேளையில், வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் திடீரென கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.