NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யேமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி!

யேமன் நாட்டில் அறக்கட்டளை ஒன்று நடத்திய நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அரேபிய தீபகற்பத்தில் ஏழை நாடாக இருப்பது யேமன். இங்கு உள்நாட்டு போரால் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளது.

யேமனில் ரமலானை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் முண்டியடித்து கொண்டதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. 

இக்கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகி உள்ளனர். 322 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சி கும்பல், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனால் அஞ்சிய பொதுமக்கள் சிதறி ஓடினர். இதுவும் இந்த துயரத்துக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles