ரத்தோட்டை – கைகாவல, இசுருகம பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை 5 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் இருப்பதாக தெரியவந்துள்ளதுள்ளதுடன் கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.