NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரவி கருணாநாயக்கவின் தாயார் காலமானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தாயார் காமி கருணாநாயக்க காலமானார்.

82 வயதில் காலமான திருமதி காமி கருணாநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் சாலிய கருணாநாயக்க ஆகியோரின் தாயாவார்.

நாட்டின் முதல் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுடன் பணியாற்றிய திருமதி காமி கருணாநாயக்க, சில காலம் தேசிய தொலைக்காட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

தற்போது, கமி கருணாநாயக்கவின் பூதவுடல் பொரளை ரேமண்ட் மலர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இன்று (19) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles