NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்ய இராணுவத் தளபதிக்கு பிடியாணை.

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் உக்ரைனிய போரில் ரஷ்யர்கள் உக்ரைனிய மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை இழைத்ததாக செர்ஜி ஷோய்கு மற்றும் வலேரி ஜெராசிமோவ் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே இவ்வாறு கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது. புடின் தலைமையில் போர் நடந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles