NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜேஸ்வரியின் மர்ம மரணத்துடன் தொடர்படைய அனைரையும் கைது செய்யுமாறு உத்தரவு!

வெலிக்கடை சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜேஸ்வரி என்ற பெண்ணின் மரணப்பரிசோதனை அறிக்கைக்கு அமைவாக இன்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அத்தனை பேரையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் பதுளை – தெமோதரையைச் சேர்ந்த ராஜன் ராஜேஸ்வரி என்ற பெண் மர்மமாக மரணித்தார்.குறித்தப் பெண், ராஜகிரிய பகுதியில் நடிகை சுதர்மா நெத்திகுமாரவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில், நகை ஒன்று காணாமல் போன குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.அவர் விசாரணைக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணித்திருந்தார்.இந்த சம்பவம் குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், அவரது மரணம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த மே மாதம் 15ஆம் திகதி ராஜன் ராஜேஸ்வரி வெலிக்கடை சிறைச்சாலையில் மர்மமான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் உயிழந்தார் என கூறப்பட்டது.தொடர்ந்து, பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு ஆரம்பித்த சிறப்பு விசாரணையில்,  உயிரிழந்த பெண்ணின் கைது தொடர்பில் பொலிஸார் முறையாக செயற்படவில்லை என்பது  தெரியவந்தது.அவரது கைது சட்ட விரோதமானது என்பதற்கான விடயங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டன.குறித்த பணிப் பெண்ணை கைது செய்ததும் பொலிஸ் பதிவு புத்தகத்தில் அதற்கான பதிவினை இட்டிருக்க வேண்டிய தேவை இருப்பினும், அவ்வாறு வெலிக்கடை பொலிஸார் செய்யாமல், அப்பெண்ணை தடுத்து வைத்து தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.தொடர்ந்து, 11 ஆம் திகதி  சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டுக்கு அமைய அன்றைய தினமே பொலிஸார் சட்ட விரோதமாக பணிப் பெண்ணை கைது செய்துள்ளமை தொடர்பிலும்  பொலிஸ் விஷேட விசாரணை பிரிவின் விசாரணையில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு  ‘ எப்படியேனும் சுதர்மாவின் மோதிரத்தை கண்டுபிடிக்குமாறு’  வழங்கிய ஆலோசனைக்கு அமைய  இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக  இதுவரையான விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்போது பொலிஸ் தாக்குதலில் மயக்க நிலையை அடைந்த பின்னரே வெலிக்கடை பொலிசார் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 42 வயதான ராஜகுமாரி மூன்று பிள்ளைகளின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles