NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரிஷி தவான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷி தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு T20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உள்ளூர் மற்றும் IPL தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் 2016ஆம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் ( 3 ஒருநாள் மற்றும் 1 T20 போட்டி) விளையாடியுள்ளார்.

இருப்பினும், அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்படாததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை. உள்ளூர் மற்றும் IPL தொடரில் மட்டுமே விளையாடி வந்தார்.

இந்நிலையில், 34 வயதான அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு T20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Share:

Related Articles