NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லசித் மலிங்க போன்று பந்து வீசும் சிறுவன் அடையாளம் – சிறுவனை நேரில் சென்று பார்வையிட ஆயத்தம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்க போன்று பந்து வீசும் சிறுவனின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்த நிலையில், அந்த சிறுவனை லசித் மலிங்க கண்டுபிடிக்குமாறு பொதுமக்களிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் குறித்த சிறுவன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும், லசித் மாலிங்க தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளமையினால் இலங்கைக்கு வருகை தந்த உடன், குறித்த சிறுவனை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share:

Related Articles