NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்தவர் காலமானார் !

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் தனது 100வது வயதில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இவர் தொலைபேசி, கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றிருந்தார்.

அத்துடன் இவர் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.

1980ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார்.

மேலும் ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles