NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லீப் தினத்தில் மாத்திரம் வெளியாகும் பத்திரிகை!

உலகில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் செய்தித்தாள் லீப் தினமான பெப்ரவரி 29 ஆம் திகதி விற்பனைக்கு வந்தது.

பிரான்ஸின் ‘லா போகி டு சப்பியுர்’ செய்தித்தாள் 20 பக்கங்களைக் கொண்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல்முறை வெளியிடப்பட்ட இந்த செய்தித்தாள் பெப்ரவரி 29 ஆம் திகதி மாத்திரம் வெளியிடப்படுவதால் அது தற்போது தனது 20 ஆவது பத்திரிக்கையை வெளியிட்டுள்ளது.

நண்பர்கள் சிலர் விளையாட்டாக அந்த செய்தித் தாளை ஆரம்பித்தனர் எனவும்200 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்ததும் முகவர்கள் பலர் தொடர்புகொண்டு மேலும் செய்தித்தாள்களைக் கேட்டதாக பதிப்பாளர் ஜீன் டி இண்டி குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ‘4 ஆண்டுகளில் தருகிறோம்!’ என்று சொல்லிவிட்டதாக அவர் கூறினார். ஒரு கேலிப் பத்திரிகையாக வெளியிடப்படும் இந்த செய்தித்தாளின் பிரதான செய்தி ‘நாம் அனைவரும் அறிவாளிகளாக இருப்போம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் செயற்கை நுண்ணறிவினால் பரீட்சைகள் மற்றும் அறிவுசார் சாதனைகள் தேவையற்றதாக மாற்றப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு தொடர் கதையும் உள்ளது எனினும் அந்தக் கதையின் அடுத்த பாகம் 2028 ஆம் ஆண்டு தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Share:

Related Articles