லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை – நாரந்தனை கிராமத்தில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளை, நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய இளைஞர் மன்றத்துடன் இணைந்து நேற்று முன்தினம் (14) இரத்ததான முகாமினை நடாத்தியிருந்தது.

குறித்த முகாமில், 30 குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சமுதாயக் கூடங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் இரத்ததான முகாம்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


