லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உயர்தரப் பிரிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர்தரப் பாடத் தெரிவு தொடர்பிலான வழிகாட்டல் கருத்தமர்வு நேற்று (16) மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில், மன்னார் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.



