NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்..!

வாழைச்சேனை பொலனறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சேற்று புதன்கிழமை 94) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய  கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலனறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மச்சக்கரவண்டியில் பிரயாணித்த 65 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த  நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்  ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறிசாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles