NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொறி 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 22 பேர் காயம்!

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியின், பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் குயின்ஸ்லேன்ட் பகுதியில் சிறிய லொறியொன்று வீதியில் இருந்து சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 22 பேர் காயமடைந்து மஸ்கெலியா மற்றும் கிளங்கன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 17 பெண்களும் 5 ஆண்களும் உள்ளனர்.

காயமடைந்த 17 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Share:

Related Articles