NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தமுன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை ஒக்டோபர் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தஇ நவம்பர் 2ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் நவம்பர் 3 ஆம் திகதி லொஹான் ரத்வத்த திடீர் நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்இ பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தார்.

இதேவேளை கார் சம்பவம் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி கங்கொடவில நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Share:

Related Articles