அமெரிக்காவும், தென்கொரியாவும் வருடந்தோறும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி மாத இறுதியில் இந்த ஆண்டுக்கான போர்ப்பயிற்சி நடைபெற உள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை போருக்கான நடைமுறை என கருதும் வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் வடகொரியாவில் உள்ள வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த ஆய்வில் கவச வாகனங்கள், பீரங்கிகள் நவீன ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அதன் உற்பத்திகளை விரைந்து செய்து முடிக்க கிம் ஜாங் உன் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.