அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்றதன் பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் புத்திசாலி என புகழாரம் சூட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வடகொரிய ஜனாதிபதி ஒரு மத வெறியர் அல்ல என்று குறிப்பிட்ட ட்ரம்ப், விரைவில் அவரை தொடர்பு கொண்டு பேச விரும்புவதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.