(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட தென்னை முக்கோணத் திட்டத் திட்டத்துடன் இணைந்து 25,000 தென்னை மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் கிளிநொச்சி இயக்கச்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடமாகாணத்தில் 40,000 ஏக்கர் தென்னந்தோப்புகள் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வடமாகாண தென்னை முக்கோண திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னை அபிவிருத்திச் சபை மற்றும் ஹெக்காப் திட்டத்தினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது, கிளிநொச்சி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும் ஆளுநர் வழங்கி வைத்தார். எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தென்னை தொடர்பான தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் 100,000 தென்னை மரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.