NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கு கிழக்கில் வெள்ளியன்று பூரண ஹர்த்தால் – ஆதரவு கோரும் தமிழ்க் கட்சிகள்!

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு வர்த்தக சங்கம் அரச ஊழியர்கள் போக்குவரத்து துறையினர் பொதுமக்கள் ஆனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (17) தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறப்பிர்களான ஞா. சிறிநேசன், பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் தவிசாளரும் ரெலோ, அமைப்பின் பிரதி தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கேசவன், ஈ.பி,ஆர்.எல்.எப், அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உநுப்பினருமான இரா.துரைரெட்ணம், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதி தலைவர் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதை சிந்திக்கவேண்டு ஜனநாயக ஆட்சி இல்லாமல் 74 சதவீதமான சிங்கள மக்களின் இன நாயக ஆட்சி நடைபெறுகின்றது இதனை சுட்டிக்காட்டுவதற்கும் நீதிதுறையை பாதுகாப்பதற்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிரான அச்சுறுத்தல். மற்றும் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றது அதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் மாகாவலி திணைக்களம் ஊடாக பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்றன.

எனவே இதனை கண்டித்து வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும் சட்டஆட்சியையும் மனித உரிமையையும் நீதிதுறையின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஹர்த்தால் கடையடைப்பு பொது வேலை நிறுத்தத்திற்க்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles