வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன