வட மத்திய மாகாண முதலமைச்சராக செயற்பட்ட எஸ்.எம் ரஞ்சித் மற்றும் அவருடைய மைத்துனியான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு மேல் நீதிமன்றம் 16 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.