NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வன்முறைக்கு நடுவே சான்விட்ச் சாப்பிட்டவர் இணையத்தில் வைரல் !

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது.

கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளன.

குறித்த வீடியோவில் பயங்கர மோதல் ஏற்பட்டுக் கொண்டிந்தவேளையில், எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியது. இதைப்பார்த்த இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்

Share:

Related Articles