NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த 17 வயது மாணவன் கைது..!

பலாங்கொடை நகரை அண்மித்த தொரவெல ஓயா பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி 78 வயதுடைய திருமணமான வயோதிப பெண்ணொருவரை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவனை பலாங்கொடை பதில் நீதவான் டி.எம்.சந்திரசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தில் வசித்த எம்.எல்.சிரியாவதி என்ற வயோதிப பெண் கடந்த 27ஆம் திகதி நீராடுவதற்காக தொரவெல ஓயாவுக்குச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் அந்தப் வயோதிப பெண் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்தையும் வாயையும் இறுக்கி கொன்றது உறுதியானது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வயோதிப பெண்ணின் மகன் கூறுகையில் “அம்மா குளிப்பதைப் பார்த்து இங்கு வந்தான். அம்மாவுக்கு செயற்கை பற்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவன் வாயை பலவந்தமாக மூடியதால் அந்த பற்கள் ​​தொண்டையில் சிக்கிக்கொண்டன. கொடூரமாக சித்திரவதை செய்தே அம்மாவை கொன்றுள்ளான்.” என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles