NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தோற்சவம் ஆரம்பமானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு கடல் தீர்த்தம் எடுக்கும் தீர்த்தோற்சவ நிகழ்வு நேற்றைய தினம் (29) ஆரம்பமானது.

இன்று முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் மாலை சம்பிரதாய முறைப்படி கடல் தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கடல் தீர்த்தம் எடுக்கப்படவுள்ளது.

ஏழு நாட்கள் முள்ளியவர் காட்டா விநாயகர் ஆலத்தில் அம்மன் சந்நிதானத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெற்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Share:

Related Articles