NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்றை மாற்றிய இப்ராகிம் சத்ரான்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான‌ இப்ராகிம் சத்ரான், ஆட்டமிழக்காது 143 பந்துகளில் 129 ஒட்டங்களை பெற்றார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உலகக்கிண்ண தொடரில் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 21 வருடம் 330 நாட்களில் இதை அடித்துள்ள அவர் உலகக் கிண்ண‌ வரலாற்றில் வலுவான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

கடைசி 10 ஓவர்களில் மட்டும் 96 ஓட்டங்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான், உலகக் கிண்ணத்தில் கடைசி 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் பதிவு செய்தது.

இதே தொடரில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா 23 வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்திருந்ததே முந்தைய சாதனையென்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles