NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரியைக் குறைத்தால் மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்..!

அரசியல் கட்சிகள் சிலவற்றின் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய வரி குறைப்பை மேற்கொண்டால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாப்பஹூவ பிரதேசத்தில் நேற்று (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மேலும் , கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இவ்வாறானதொரு தேர்தலினை நடத்த முடியுமென எந்தவொரு நபரும் நினைத்திருக்கவில்லை.எனினும் அந்த விடயம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை பாதுகாத்து மக்களை வாழவைப்பதற்காகவே நாட்டை பொறுப்பேற்றுக் குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில கட்சிகள் கூறுவதைப் போன்று கோட்டாபாய ராஜபக்‌ஷ கடந்த 2019ஆம் ஆண்டு வரிக்குறைப்பை மேற்கொண்டார்.

அதன் விளைவாகவே பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles