இந்த வருடத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 6,481 பேரும், இந்தியாவிலிருந்து 6,183 பேரும், பிரித்தானியாவில் இருந்து 2,928 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.