தமது வரலாற்றில் வருடமொன்றில் ஈட்டிய அதிகூடிய வருமானத்தை, 2024 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கம் பதிவு செய்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கம் 1.5 டிரில்லியன் ரூபாவினை வருமானமாக ஈட்டியுள்ளதாகச் சுங்க ஊடக பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் வரி வசூல் செயல்முறையைத் திறம்படச் செய்வதற்குச் சுங்க நிர்வாகம் மேற்கொண்ட மறுசீரமைப்புகள் என்பன இந்த வருவாயை ஈட்டுவதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வரி வருவாய் இலக்குகளைப் பூர்த்தி செய்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்தமைக்காக இலங்கை சுங்க தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் சுங்க ஊடக பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.