NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வர்த்தகர் மீது மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு இன்று (09) அதிகாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து சுமார் 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தகர் காலை வர்த்தகத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொரு தொழிலாளியை ஏற்றிக்கொண்டு தொழிலாளியை மேகொட தம்ம மாவத்தை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது மீகொட சிறிரத்தன மாவத்தையில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் திடீரென மிளகாய்ப் பொடியைத் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப் பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles