NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நாளைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பிரதானமாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, திருகோணமலையிலிருந்து காங்கசன்துறை மன்னார் வரையிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் வழியாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles