NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டண அதிகரிப்பு விவகாரம் – இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் கோரிக்கை!

பல வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி, மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு விசேட கவனம் செலுத்துமாறு, இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மின்சாரக் கட்டண அதிகரிப்புடன், வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனயீர்ப்பு விரைவில் அமுல்படுத்தப்படுவதோடு, சமய ஸ்தலங்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பௌத்த சம்மேளன பொதுச்சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், மேற்படி பிரேரணைகளை அமுல்படுத்துமாறு மேற்படி கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் மின்சக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைத்த பிரேரணையில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles