வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கோவில்புதுக்குளத்தை சேர்ந்த 63 வயதுடைய எம். விஜயரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் பார்வையிட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.