தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 80 சதவீதமான உழுந்து செய்கை முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.
இதன்காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் உழுந்து செய்கையை கைவிட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல இலட்சங்களை செலவழித்து உழுந்து செய்கை மேற்கொண்ட நிலையில், இவ்வாறானதொரு அவல நிலைமை தமக்கு ஏற்பட்டிருப்பது தொடர்பில் உழுந்து செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தமக்கான நட்டஈட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்முறை 13 ஆயிரத்து 961 ஏக்கர் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 11 ஆயிரத்து 231 ஏக்கர் முழுமையாக அழிவடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.